Saturday 6 May 2017

ஜீவகாந்த பதிவு (BIO-MAGNETIC RECORD)

ஜீவகாந்த பதிவு (BIO-MAGNETIC RECORD)

ஜீவகாந்தம் என்பது பஞ்சபூதங்களால் ஆன உடல், ஸ்தூல உடல், சூக்குமஉடல், காரண உடல் அதாவது பரு உடல், உயிருடல், மன உடல் மனதில் ஆழ்மனம், அடிமனம், மேல்மனம் எனக்கூடிய மனதின் தன்மை ஆகிய அனைத்தும் கொண்ட மொத்த தொகுப்பு ஜீவ உடல் ஆகும். ஜீவகாந்தம் என்பது பஞ்சபூதங்களால்  ஆன உடலில் மனதில் உள்ள ஆழ்மனம், அடிமனம், மேல்மனம், இதில் நமது பெயர் ஆழ்மனதில் நம்மையரியாமல் மனனமாகி கொண்டேயிருக்கும் இந்த மனனத்தின் விளைவால் ஆழ்மனதில் பதிவு ஆகிறது இந்த ஆழ்மன பதிவு குறிப்பிட்ட அலைவேகத்தில் இயங்கி உடல் முழுவதும் பதியும்படி செய்கிறது.
இது எவ்வாறெனில் நீர் உள்ள பாத்திரத்தில்  நடுவில் ஒரு கல் விழுந்தால் எவ்வாறு அந்த அலை பாத்திரம் முழுவதும் நிறைந்து இருக்குமோ அதுபோல் நம்பெயர் பரு உடல், உயிருடல், மனஉடல் என்ற மூன்று உடலிலும் பதிவாகிறது. இந்த ஆழ்மன பதிவு குறிப்பிட்ட அலைவேகத்தில் இயங்கி உடல் முழுவதும் பதியும்படி செய்கிறது. இந்த மூன்று உடலின் மொத்த பதிவையே ஜீவகாந்தப் பதிவு என்பதாகும்.

இந்த ஜீவகாந்தத்தில் பெயர் பதிவு மட்டுமே நிகழ்வதில்லை கண்ணால் காணக்கூடியதும், நம் எண்ணங்களும், செயல்பாடுகளும், காதால் கேட்பதும், நாம் பேசக்கூடியது என அனைத்தும் பதிவாகின்றது இந்த பதிவுகளை பற்றி பின்னொரு நூலில் விளக்கிக் கூறலாம்.
  

No comments:

Post a Comment