Saturday 6 May 2017

பிரபஞ்ச தோற்றம் - பஞ்ச பூதங்களின் தோற்றம்



பிரபஞ்ச தோற்றம் - பஞ்ச பூதங்களின் தோற்றம்

அண்ட கோடியிலுள்ள அனைத்து கிரகங்களும் அணுக்களின் கூட்டமேயாகும். இவ்வணுக்களின் கூட்டம் சுத்த வெளியின் வெளிப்பாடாகும். சுத்த வெளி என்பது இயங்காத நிலை. இயங்காத நிலையிலுள்ள ஓர் அணு இயங்கும் நிலைக்கு தற்சுழற்சி காரணமாக வெளிப்படும் போது இயங்கும் நிலை உருவாகிறது. அது சக்தி அணு எனப்படும். இந்த சக்தி அணு தற்சுழற்சி, வேகம், பருமன் இவற்றின் துணை கொண்டு  பல அணுக்கள் உருவாகின்றது. இவ்வணுக்களுக்கு இரண்டு காந்த தன்மைகள் உண்டு. தள்ளும் சக்தி, ஈர்க்கும் சக்தி என்பதாகும். இதையே நம் முனிவர்கள் அன்றைய மனிதர்களுக்கு விளங்காத காரணத்தால் காந்தத்திற்கு இரண்டு தன்மை தள்ளும் சக்தி, ஈர்க்கும் சக்தி. இதையே கந்தனுக்கு இரண்டு மனைவி வள்ளி, தெய்வானை என்று குறிப்பிட்டனர். காந்தன் காலத்தால் மருவி கந்தனானார். அதே போல் சிவ சக்தி என்பதும், சிவனின் தன் பாதி  சக்தி என்று கூறுவதன் உள்நோக்கம், இயக்கமற்ற சிவனுள் இயங்கும் சக்தி தன் பாதி என கூறப்பட்டது.
இச்சிவனை இயக்கமற்றவன் என்பதை சுத்த வெளி என்பர். இயங்கும், சக்தி களம் என்பது அண்ட கோடியில் அமைந்திருக்கும் கிரகங்கள், ஜீவராசிகள் அனைத்துமாகும்.
கிரகங்களின் தோற்றமும், அதன் சுற்று வட்டபாதைகளும் அது செல்லும் வேகமும் ஒரே மாதிரியானதாகும். அணுக்களின் கூட்டமே கிரகங்களாகும். அணுக்கள் ஒன்றோடொன்று மோதியும், விலகியும் அதாவது ஈர்க்கும் சக்தியையும், தள்ளும் சக்தியையும் கொண்டு அதிகமாக அவைகளும் இரு சக்திகளை மையமாக வைத்து இணைந்து கிரகங்கள் தன் வட்டப்பாதையில் தன்னை தானே சுழன்று கொண்டு தன் பாதையில் நகர்ந்தும் பிசகாமல் சூரியனை மையமாக வைத்து சுழன்று கொண்டு வருகிறது.
பஞ்சபூதங்களாகிய நிலம், நீர், நெருப்பு, காற்று, விண் ஆகிய அனைத்தும் அணுக்களின் கூட்டமேயாகும். இவற்றில் முதலில் தோன்றியது விண் ஆகும். பிறகு காற்று, அடுத்ததாக நீர், நெருப்பு, நிலம் என்பதாகும். கிரகங்கள் அனைத்தும் சக்தி களம் முழுவதும் ஒரு வட்ட வடிவமான ஒரு அமைப்பாகும். அவற்றில் விண் என்ற அணுவிலிருந்து வெளிப்படும் அதிர்வலைகள், விண்கல் தன்னுள் மோதிக்கொண்டு காற்றை வெளிப்படுதுகின்றன. இக்காற்றானது மையத்தை நோக்கி விரைந்து வரவர அதன் அடர்த்தி அதிகமாகி ஆக்ஸிஜன் அதாவது நாம் சுவாசிக்கும் காற்றாக அமைகிறது. இதனையே நம் விஞ்ஞானிகள் பூமியிலிருந்து 10 மைல் சுற்றளவிற்கு காற்று அடர்தியாகவும், அதற்குமேல் 100 மைல் சுற்றளவிற்கு காற்று அடர்த்தி குறைவாகவும் அமந்துள்ளதாக கூறுகிறார்கள். ஆக்ஸிஜன் ஆகிய காற்று மையத்தை நோக்கி விரைந்து செல்லும் பொழுது ஹைட்ரஜன் வாயுவாக திரிந்து இவை ஆக்ஸிஜனும், ஹைட்ரஜனும் (H2O) இணைந்த நிலயை நீரின் தோற்றமாக உள்ளது. இந்த நீர் அதன் மையத்தை நோக்கி செல்லும் பொழுது நெருப்பாக ஆகிறது. இந்த நெருப்பு குழம்பு அதன் மையத்தை நோக்கி விரையும் பொழுது, இருக்கும் அணுக்கருக்குள் சிதைவு ஏற்பட மையத்திலிருந்து நெருப்பு குழம்பு பீறிட்டு வெளிவருகிறது. இது நீர் பரப்பிற்கு அப்பால் சென்று எரிமலையாக அமைகிறது.

அங்குள்ள காற்று ஆக்ஸிஜன் அந்த எரிமலையை குளிரச் செய்து கற்பாறைகளாக, மலைகளாக அமைகிறது. இவ்வாறு நிலம் அமைகிறது. இதன் மொத்த தொகுப்பை பூமி என்று அழைக்கிறோம்.  விண் தோன்றுவதற்கு முன் வெற்றிடமே அமைந்திருக்கவேண்டும். அதற்கு அடுத்த நிலையில் விண் உருவாகி விண்ணிலிறிந்து காற்று உருவாகி, நெருப்பிலிருந்து நிலம் உருவாகியுள்ளது. இதன் அடுத்த நிலையே பரிணாம வளர்ச்சியின் உச்சகட்டமாகிய உயிரினங்கள் முதல் மனிதன் வரை தோன்றியுள்ளனர்.  இந்த இயக்கம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது.


No comments:

Post a Comment