Saturday 6 May 2017

பிறப்பும் இறப்பும் Born and Death


பிறப்பும் இறப்பும் Born and Death

                                   
பிறப்பிற்கு இறப்பிற்கும் இடைப்பட்ட நாட்களே ஒருவரது வாழ்க்கையின் வரலாறாக அமைகிறது. பிறப்பில் எவ்வித பாகுபாடுமில்லை. இறப்பிலும் எவ்வித பாகுபாடுமில்லை. பிறந்தவன் ஒருநாள் இறப்பது உறுதி.  யாரும் இவ்வுலகில் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்ததாக சரித்திரமில்லை. இப்படி இருக்கையில் நம் பிறப்பிற்கும் இடையே பல்வேறு மாற்றங்கள் ஏன்? நம்முள் குணாதிசயங்கள் மாறுபடுவது ஏன்? ஒருவர் குற்றவாளியாக இருக்கிறார்.  ஒருவர் எதிர்பாராத விபத்தினால் மரணமடைக்கிறார்.  ஒருவர் பிறந்தது முதல் இறக்கும் வரை வாழ்க்கையில் சொல்லிலடங்கா துன்பத்தை அனுபவிக்கிறார். ஒருவர் வியாதிகளால் அவதியுறுகிறார்.
ஒருவர் இந்த சமுதாயத்திற்கு நன்மைகளை செய்து வருகிறார். ஒருவர் இச்சமுதாயதிற்கு தீமைகளை செய்து வருகிறார். ஒருவர் வசதி வாய்ப்புகளோடு வாழ்கின்றார். ஒருவர் புகழும் அந்தஸ்தையும் பெற்று வாழ்கிறார். ஒருவர் கையையோ காலையோ இழந்து காணப்படுகிறார். ஒருவர் அவர் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் தடையாக, வீழ்ச்சியாக உள்ளது. முன்னேற முடியாமல் துடிக்கின்றனர்.  குழந்தையில்லா நிலை, குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் ஒற்றுமையில்லாத நிலை, திருமணம் தள்ளிக்கொண்டே செல்வதான நிலை, எதிர்காலம் பற்றிய பயம், தன்னுடைய மரணம் எப்படிப்பட்டதோ என்ற பயம், தொழிலில் நஷ்டத்தின் மேல் நஷ்டம் என அன்றாட வாழ்வில் காணும் துன்ப நிகழ்ச்சிகளோ ஏராளம் காரணம் என்ன? ஏன் இந்த மாறுபாடு ஒருவர் நன்மையை மட்டும் அடைகிறார்.
ஒருவர் தீமையை மட்டுமே அனுபவித்துவருகிறார். இதற்கு காரணம் யார்நம் பெற்றோர்களா? நம்மை சுற்றியுள்ளவர்களா? நம் நண்பர்களா? இந்த சமுதாயமோ? இந்த நாடா? இந்த உலகமா? நம் முன்னோர்களா? அல்லது நம் அரசாங்கமா என்று நம்முள் கேட்டு பார்த்தால் பெற்றோர்கள் எப்பொழுதாவது தன் குழந்தைகள் கஷ்டப்பட வேண்டும் என்று எண்ணுவார்களா என்றால் இல்லை. அப்படியானால் பெற்றோர்கள் காரணமில்லை. முன்னோர்கள் என்றால் நம் கண்ணுக்கு தெரியாதவர்கள் இவர்களும் காரணமில்லை.
இந்த சமுதாயமா என்றால் இந்த சமுதாயம்தான் நமக்கு படிக்கவும், உடைகளும், உணவும் அளித்து பாதுகாத்து வருகிறது. இந்த சமுதாயமும் காரணமில்லை. இவ்வாறு பார்த்தால் யாரும் காரணமில்லை. நம் பெயரே நம் இன்ப துன்பங்கள் அனைத்திற்கும் காரணமாக உள்ளது. பெயர்தானே என்ற அலட்சிய போக்கு  இன்னும் நிலவுகிறது. காரணம் கெடுக்க நினைக்கமாட்டார்கள். ஆகவே அவர்கள் தன் குழந்தைகளுக்கு பெயரை அறியாமையால்  சூட்டுகிறார்கள் தவிர தெரிந்து சூட்டுவதில்லை.

மனிதர்களுக்குள் மாறுபாடுகள் இருப்பதற்கு காரணம் நாம் பிறக்கக்கூடிய தேதி, மாதம், வீதி எண், கிழமைநேரம்பஞ்சபூதங்களில்எண்அடிப்படையில் பிறந்துள்ளோம் என்பதை பொருத்து மாறுபடுகிறது.பிறப்பவர்கள் யாரும் துன்பப்படுவதற்கு என்று பிறக்கவில்லை. பிறந்த தேதி நம் குணாதிசயங்களையும், வீதி எண் நாம் எவ்வளவு தூரம் பிரயாணம் செய்வோம் என்பதையும் நிர்ணயம் செய்கின்றது.


No comments:

Post a Comment